60 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் அக்.25 வரை கடலுக்கு செல்ல வேண்டாம்: இந்திய கடல் சேவை மையம் எச்சரிக்கை

நாகர்கோவில்: வங்க கடல் பகுதிகளில் அக்டோபர் 25ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மற்றும் அதனையொட்டி வடக்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் 60 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசும். ஒடிசா, மேற்கு வங்க கடல் பகுதிகள், வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதிகளிலும் பலத்த காற்று வீசும். மேலும் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும்.

வடக்கு வங்க கடல், அதனையொட்டி மேற்கு வங்க கடல் பகுதிகள், வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளிலும் பலத்த காற்று வீசும். வரும் 25ம் தேதி வரை இந்த நிலை நீடிக்கும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாம்பனில் 1ம் எண் புயல் கூண்டு: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதன் காரணமாக, பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று பகல் 1.40 மணியளவில் எண். 1 புயல் கூண்டு ஏற்றப்பட்டது. கடலுக்கு செல்லும் மீனவர்கள்  பாதுகாப்புடன் இருக்க எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இதேபோல நாகை துறைமுகத்திலும் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Related Stories: