அமைச்சர் தகவல் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை

சென்னை:  தமிழகம் முழுவதும் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த 32,982 ரேஷன் கடைகள் மூலம் பெரிய வெங்காயம் விற்பனை செய்ய  நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். வெங்காய விலையை கட்டுப்படுத்துவது குறித்து கூட்டுறவு துறை அமைச்சர்  செல்லூர் ராஜூ, கூட்டுறவு துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள பண்ணை  பசுமை நுகர்வோர் கடையில் 45க்கு வெங்காய விற்பனையை அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம்  கூறியதாவது: பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் 45க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் படிப்படியாக 32,982 ரேஷன் கடைகள் மூலமும் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் பெரிய  வெங்காயம் தேவை ஆண்டுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன், சின்ன வெங்காயம் 4 லட்சம் மெட்ரிக் டன் தேவை. இந்தியாவில் அதிகளவாக  மகாராஷ்டிராவில் 42% வெங்காயம் உற்பத்தியாகிறது. உணவு பொருட்களை பதுக்கல் செய்தால் உணவு கட்டுப்பாட்டு பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை  எடுக்கப்படும் என்றார்.

Related Stories: