ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்கள் குறித்து ஆலோசனை: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்: NCTC அறிவிப்பு.!!!

சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் வெளியிட்டுள்ள தகவலில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே சான்றிதழ் செல்லும் என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டு புதிய நடைமுறை உடனடியாக அமலாகிறது. ஒருமுறை ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால், அது ஆயுள் முழுவதும் செல்லும் என்று விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் குறிப்பிட்டுள்ள தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம், ஏற்கனவே TET தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றோருக்கு, ஆயுள் வரை சான்றிதழ் நீட்டிப்பு வழங்குவது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. தற்போது, தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் முடிவு ஆசிரியர்கள் மத்தியில் ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: