காவலர் வீரவணக்க நாள் : உயிர்நீத்த காவலர்களுக்கு தேசிய காவலர் நினைவிடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மலர் வளையம் வைத்து மரியாதை!!

டெல்லி :  காவலர் வீரவணக்க நாளையொட்டி டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வகையில் இன்று வீர வணக்கநாளை யொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவலர் நினைவுச் சின்னங்களில் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. உயிர்நீத்த போலீசாருக்கு அந்தந்த பகுதி காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் வீரவணக்கம் செலுத்துகின்றனர்.

டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவுச் சின்னத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, கொரோனாவுக்கு  எதிரான போரின்போது, 343 காவல்துறையினர் தங்கள் உயிர்களை இழந்தனர் என்பதை நினைவுக் கூர்ந்தார்.  இதேபோல் அந்தந்த மாநில காவல்துறை சார்பில் காவலர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தப்படுகிறது. உயிர்த்தியாகம் செய்த காவலர்களுக்கு புகழாரம் சூட்டி சமூக வலைத்தலங்களில் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

 டிஜிபி திரிபாதி மரியாதை

காவலர் வீரவணக்க நாளையொட்டி உயிர்நீத்த காவலர்களுக்கு தமிழகம் முழுவதும் காவல்துறையினர் மரியாதை செலுத்தி வருகின்றனர். காவலர் வீரவணக்க நாளையொட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது அலுவலகத்தில் டிஜிபி திரிபாதி மரியாதை செலுத்தினார். காவலர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலும் மரியாதை செலுத்தினார்.

Related Stories: