தொடரும் பலிகள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் தொடர்ந்து பலியாகி வரும் நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுவால் ஒரு குடும்பம் எந்த அளவுக்கு சீரழியுமோ, அதை விட மோசமான சீரழிவுகளை, அதைவிட குறைவான காலத்தில் ஆன்லைன் சூதாட்டம் ஏற்படுத்தும். ஆன்லைன் சூதாட்டம் என்பது புதைமணலை விட மோசமானது; அதிலிருந்து மீண்டு வர முடியாது.

இதற்கு ஆயிரமாயிரம் உதாரணங்களைக் கூற முடியும். அதனால்தான் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும். ஏற்கனவே பலமுறை வலியுறுத்தியிருக்கும் போதிலும், மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன். மத்திய, மாநில அரசுகளேஆன்லைன் சூதாட்டம் என்ற ஆக்டபஸ் இன்னும் பல குடும்பங்களை வளைத்து சீரழிப்பதற்கு முன்பாக அதை தடை செய்யுங்கள்; அதன்மூலம் கோடிக்கணக்கான குடும்பங்களைக் காப்பாற்றுங்கள் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: