காலி பாட்டிலில் கலைவண்ணம்: ஊட்டி மாணவி அசத்தல்

ஊட்டி: கொரோனா ஊரடங்கில் 240க்கும் மேற்பட்ட காலி பாட்டில்களில் ஓவியம் வரைந்து, ஊட்டியை சேர்ந்த மாணவி சாதனை படைத்துள்ளார். ஊட்டி பிங்கர்போஸ்ட் அருகேயுள்ள பட்பயர் பகுதியை சேர்ந்தவர் தீபா. இவர் கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் எம்.காம்., படித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், வீடு திரும்பிய அவர், பல்வேறு வடிவங்களில் உள்ள காலி பாட்டில்களில் வர்ணம் தீட்டி தோடர் குடில், படுகர் இன மக்கள், தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்துள்ளார். இதுபோன்ற சாதனைகளை அங்கீகரிக்கும் தனியார் அமைப்பிடம் விண்ணபித்துள்ளார். அவர்கள் நேரில் வந்து, தீபாவின் பாட்டில் ஓவியங்களை பார்வையிட்டு அங்கீகரித்துள்ளனர். இதனால் அவர் ரியல் வேல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

அதற்கான சான்றிதழை கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் காண்பித்து பாராட்டையும் பெற்றுள்ளார். இதுகுறித்து மாணவி தீபா கூறுகையில், சாலையோரம் கிடக்கும் அனைத்து காலி பாட்டில்களையும் சேகரித்து, அவற்றை தூய்மைப்படுத்தி அவற்றில் ஓவியங்கள் வரைவதை வழக்கமாக வைத்துள்ளேன். இதுவரை 240க்கும் மேற்பட்ட பாட்டில்கள் ஒவியங்கள் வரைந்துள்ளேன். தேங்காய் ஓடு, முட்டை ஓடு, சணல் கயிறு, பழைய வளையல்கள், செய்திதாள் போன்றவற்ைற பயன்படுத்தியுள்ளேன், என்றார்.

Related Stories: