காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை

காஞ்சிபுரம்: .தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்காத நிலையில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு செய்திருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை முதல் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல்மழை பெய்தது. இதேபோன்று, வாலாஜாபாத், உத்திரமேரூர், பெரும்புதூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக சாரல்மழை பெய்தது.

கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பை விட குறைவாத பெய்த நிலையில் இந்த ஆண்டு இதுவரை வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும் என்று முறையான அறிவிப்பு இதுவரை வானிலை மையத்தால் வெளியிடப்படவில்லை. இதனால் விவசாயப் பணிகளை நம்பிக்கையுடன் தொடங்க பலத்த மழை எப்போது பெய்யும் என எதிர்பார்ப்புடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

Related Stories: