டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் வீடுகளை சுற்றி தேங்காய் சிரட்டை, ஆட்டுக்கல் ஆகியவை வெட்ட வெளியில் உள்ளதால் இதில் தேங்கும் மழைநீரில் டெங்கு கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. எனவே, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வலியுறுத்தி பேரூராட்சி செயல் அலுவலர் மாலா தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் ஊத்துக்கோட்டை பகுதிகளில் உள்ள வீடுகளின் சுற்றுப்புறத்தில் சோதனை செய்து கொசு மருந்து அடித்தனர்.   

Related Stories: