அண்ணா பல்கலைக்கழக பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வில் ஏராளமான மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைப்பு எனத் தகவல்..!!

சென்னை: கொரோனா காலத்தில் இந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வில் ஏராளமான மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. பொறியியல் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெற்றது. இறுதியாண்டு மாணவர்களைத் தவிர்த்து, மற்றவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 24ம் தேதி முதல், இளங்கலை மற்றும் முதுகலை இறுதி செமஸ்டர் தேர்வுகள் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் உதவியுடன் தேர்வுகளை நடத்தியது.

மேலும், செப்டம்பர் 29-ம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்வில், 30 மதிப்பெண்களுக்கு ஒரு மணிநேரம் ஒதுக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறால் சரியாகத் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பினையும் அளித்தது. அதன் விடைகள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, ஆன்லைனில் முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில், பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வில் ஏராளமான மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. சில மாணவர்களுக்கு WH1 என தேர்வு முடிவு காண்பிப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகம் என்பதால் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

இதனையடுத்து, முடிவு நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு குறித்தும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. சில இறுதியாண்டு மாணவர்கள் வளாகத் நேர்முகங்கள் மூலம் பணிக்கு தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: