காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் போலீசார் நேரடியாக சென்று 232 புகார்கள் மீது விசாரணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பெறப்படும் புகார் மனுக்கள் மீது சம்பவ இடத்துக்கே சென்று போலீசார் மூலம் விசாரித்து, பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படுகிறது. தமிழகத்தில் காவல் நிலையங்களில் பெறப்படும் புகார்களுக்கு, நேரடியாக சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டும் என போலீசாருக்கு, காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, காஞ்சிபுரம் சரகத்தில் டிஐஜி சாமுண்டீஸ்வரி, எஸ்பி சண்முகப்பிரியா ஆகியோர், அனைத்து காவல் நிலைய போலீசாரும் சம்பவ இடத்துக்கே சென்று விசாரணை நடத்தி வழக்கை முடித்து வைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதைதொடர்ந்து, விஷ்ணுகாஞ்சி இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், எஸ்எஸ்ஐ முரளிகிருஷ்ணா, ஜெயராமன், காவலர்கள் அசோக், திருமால் ஆகியோர் தேரடி, ஆதிசங்கரர் நகர், அண்ணா அவென்யு, காவலான்கேட், சின்ன காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து பெறப்பட்ட புகார்கள் மீது விசாரணை நடத்தி 30 வழக்குகளை முடித்து வைத்தனர். இதேபோல் காஞ்சிபுரம் சரக எல்லைக்கு உட்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தின் 11 சட்டம் ஒழுங்கு, 2 அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பெறப்பட்ட 119 புகார்களுக்கு சிஎஸ்ஆர் எண் வழங்கி 90 மனுக்களும், செங்கல்பட்டு மாவட்டத்தின் 28 சட்டம் ஒழுங்கு, 3 அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பெறப்பட்ட 111 புகார்களுக்கு சிஎஸ்ஆர் எண் வழங்கி 101 மனுக்களும்,

திருவள்ளூர் மாவட்டத்தின் 29 சட்டம் ஒழுங்கு, 5 அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பெறப்பட்ட 115 மனுக்களுக்கு சிஎஸ்ஆர் எண் வழங்கி 41 மனுக்கள் என மொத்தம் 232 புகார் மனுக்களுக்கு சம்பவ இடத்திற்கே சென்று விசாரணை நடத்தி முடித்து வைக்கப்பட்டுள்ளது.இதன்மூலம், மாற்றுத் திறனாளிகள், முதியோர் உள்பட பாதிக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் வீட்டில் இருந்தே, தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுதிறது.

Related Stories: