கேரளா நவராத்திரி விழாவிற்காக சாமி சிலைகள் பவனி.: இருமாநில எல்லையில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை

கன்னியாகுமரி: நவராத்திரி விழாவுக்காக கன்னியாகுமரியில் இருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்ட சாமி சிலைகளுக்கு இருமாநில போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செய்தனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்க்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய சாமி சிலைகள் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து நேற்று புறப்பட்டது.

பல்லக்குகளில் பவனியாக சென்ற சாமி சிலைகள் இன்று காலை இருமாநில எல்லையான காளியக்காவிலே சென்றடைந்தது. அப்போது இருமாநில போலீசாரும் துப்பாக்கிகளை ஏந்தி அணிவகுப்பு மரியாதை செய்தனர். மாநில எல்லையை அடைந்ததும், பவனி பாதுகாப்பது பணிகளை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேரளா போலீசாரிடம் முறைப்படி ஒப்படைத்தார்.

 

ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் நடப்பு ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக குறைந்த அளவு பக்தர்கள் மட்டும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: