சென்னையில் கடந்த 10 நாட்களில் இரவு நேர ரோந்து பணியின்போது 150-க்கும் மேற்பட்ட பழைய குற்றவாளிகள் கைது: போலீசார் அதிரடி.!!!!

சென்னை: சென்னையில் கடந்த 10 நாட்களில் காவல்துறையினரின் இரவு நேர ரோந்து பணியின்போது பழைய குற்றவாளிகள் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகர் மற்றும் புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்  குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை மாநகர காவல் துறை குற்றங்களை தடுக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும் குற்றங்களை கட்டுப்படுத்த முடியாத நிலை தான் உள்ளது. சமீபகாலமாக  கொலை, கொள்ளை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் உத்தரவின்படி, இரவு நேரங்களில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, பெரம்பூர் செம்பியம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக மூட்டைகளை  எடுத்துச்சென்ற நபர்களிடமும், மாங்காட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் தலைமறைவான குற்றவாளிகள் என்பது தெரியவந்தது. இதைப்போன்று, கடந்த 10 நாட்களில் மட்டுமே இரவு நேர ரோந்து பணியின்போது சுமார் 150-க்கும் மேற்பட்ட பழைய குற்றவாளிகள் காவல்துறையிடம்  சிக்கியுள்ளனர். இருப்பினும், இரவு நேரத்தில் பழைய குற்றவாளிகள் சென்னையில் சுற்றித்திரிவது சென்னை வாசிகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: