உலகளவில் 11 லட்சத்தை நெருங்கிய கொரோனா பலி.. கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரம் பேர் உயிரிழப்பு : பாதிப்பும் 3.87 கோடியை தாண்டியது!!

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 87 லட்சத்தை கடந்தது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 87 லட்சமாக அதிகரித்துள்ளது.தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 87 லட்சத்து 27 ஆயிரத்து 910 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 85 லட்சத்து 20 ஆயிரத்து 646 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 70 ஆயிரத்து 65 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 90 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது . ஆனாலும், கொரோனாவால் இதுவரை 10 லட்சத்து 96 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 81,48,282

இந்தியா - 72,39,390

பிரேசில் - 51,41,498

ரஷியா - 13,40,409

ஸ்பெயின் - 9,37,311

அர்ஜெண்டினா - 9,31,967

கொலம்பியா - 9,30,159

பெரு - 8,56,951

மெக்சிகோ - 8,25,340

பிரான்ஸ் - 7,79,063

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 2,21,824

பிரேசில் - 1,51,779

இந்தியா - 1,10,586

மெக்சிகோ - 84,420

இங்கிலாந்து - 43,155

இத்தாலி - 36,289

பெரு - 33,512

ஸ்பெயின் - 33,413

பிரான்ஸ் - 33,037

ஈரான் - 29,349

கொலம்பியா - 28,306

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

இந்தியா - 63,01,928

அமெரிக்கா - 52,69,705

பிரேசில் - 45,68,813

ரஷியா - 10,39,705

கொலம்பியா - 8,16,667

பெரு - 7,59,597

அர்ஜெண்டினா - 7,51,146

தென் ஆப்ரிக்கா - 6,26,898

Related Stories: