கண்ணன்கோட்டை நீர்தேக்க திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டையில் ரூ.380 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நீர்தேக்க திட்ட பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நீர்தேக்கத்தை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஷ்வரி ரவிக்குமார், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் முத்தையா நேற்று ஆய்வு செய்தனர். கண்ணன்கோட்டையில் உள்ள ஈசாராஜன் ஏரியை தேர்வாய் ஏரியோடு இணைத்து கண்ணண் கோட்டையில் நீர்தேக்கம் அமைத்து இதன் மூலம் 1 டிஎம்சி தண்ணீரைதேக்கி, சென்னை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லும் வகையில் 2010ம் ஆண்டு திட்டமிட்டு கண்ணன்கோட்டையில் 850 ஏக்கர் பட்டா நிலம் உள்ளிட்ட 1500 ஏக்கர் விவசாய நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது.   கண்ணன்கோட்டை பகுதி மக்களின் பல்வேறு எதிர்ப்புகள் போராட்டங்களை தாண்டி இந்த திட்டம் நிறைவுபெற காலதாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், தற்போது இந்த நீர்தேக்க திட்டப்பணி முடிவடையும் நிலையில் இருக்கிறது. இந்நிலையில், நீர்தேக்க திட்டப் பணிகளை கடந்தவாரம் தமிழக முதல்வரின் கூடுதல் தலைமை செயலாளர் சாய்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் தொடர்ந்து ஆய்வுசெய்து வந்த நிலையில் இறுதிகட்டப் பணிகளை திருவள்ளூர் கலெக்டர் மகேஷ்வரி ரவிக்குமார், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் முத்தையா ஆய்வு மேற்கொண்டனர். கலெக்டர், ஒரு வாரத்தில் கரைகள் அமைக்கும் பணியை முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். மாவட்ட ஊரக வளர்ச்சித்திட்ட இயக்குனர் க.லோகநாயகி, கண்ணன்கோட்டை நீர்தேக்க திட்ட பொறியாளர் என்.தில்லைக்கரசி, உதவி பொறியாளர்கள் தனசேகர், சுந்தரம், பாபு, பத்மநாபன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: