தங்கம் விலை 2வது நாளாக சரிவு சவரனுக்கு ரூ.392 குறைந்தது; நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.392 குறைந்தது. இது நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை கடந்த செப்டம்பர் மாதம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்த மாதம் முதல் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.6 அதிகரித்து ஒரு கிராம் 4,815க்கும், சவரனுக்கு 48 அதிகரித்து ஒரு சவரன் 38,520க்கும் விற்கப்பட்டது. அடுத்த நாள் யாரும் எதிர்பார்க்காத வகையில், சவரனுக்கு 432 அதிகரித்து ஒரு சவரன் 38,952க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.38,920க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை குறைந்தது. சென்னையில் நேற்று காலை தங்கத்தின் விலை (ஒரு கிராமுக்கு ரூ.47 குறைந்து) சவரனுக்கு ரூ.376 குறைந்து ரூ.38,704க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை திடீரென தங்கத்தின் விலை மேலும் சவரனுக்கு ரூ.2 குறைந்தது. அதாவது, காலையில் சவரன் ₹ரூ.4,838க்கு விற்பனையான நிலையில், நேற்று மாலை ரூ.4,836க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், நேற்று மாலையில் ரூ.392 குறைந்து ரூ.38,688க்கு விற்பனையானது. இந்நிலையில் இரண்டாவது நாளாக தங்கம் விலை குறைந்திருப்பது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: