முதல் முறையாக கடந்த மாதத்தில் டிராக்டர் விற்பனை 1 லட்சத்தை தாண்டியது: பொருளாதார ஏற்றத்துக்கு நம்பிக்கை தரும் விவசாயம்

புதுடெல்லி: கடந்த செப்டம்பர் மாதத்தில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்கள் விற்பனையாகியுள்ளன. கொரோனா பரவலால் தொழில்துறைகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், விவசாயம் மட்டுமே பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுத்து வருகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் டிராக்டர் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் முதல் முறையாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் 1,16,185 டிராக்டர்கள் விற்பனையாகியுள்ளன. அதாவது, இந்த ஆண்டில் முதல் முறையாக 1 லட்சம் எண்ணிக்கையை தாண்டி விற்பனையாகியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் 3வது முறையாக இந்த சாதனை இலக்கு எட்டப்பட்டுள்ளது. காரிப் அறுவடை அதிகரிப்பு காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளதாக, ஆட்டோமொபைல் டீலர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பரில் மகிந்திரா அண்ட் மகிந்திரா டிராக்டர்கள் 42,361 விற்பனையாகியுள்ளன. இது 18 சதவீத வளர்ச்சி. இதுபோல் எஸ்கார்ட் டிராக்டர்கள் விற்பனை 9.2 சதவீதம் அதிகரித்து 11,851 ஆகவும் அதிகரித்துள்ளது. சோனாலிகா டிராக்டர்கள் விற்பனை 51.4 சதவீதம் உயர்ந்துள்ளது.

Related Stories: