சேதமடைந்த நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் குடிநீர் தொட்டி: புதிதாக கட்டித்தர கோரிக்கை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி சக்கம்பட்டியில் சேதமடைந்த நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் குடிநீர் தொட்டியை இடித்து, புதிதாக கட்டித் தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபட்டி பேரூராட்சியில் சக்கம்பட்டி 14வது வார்டு சுப்பிரமணிகோவில் தெருவில் சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கடந்த 25 ஆண்டுகளுக்கும் முன்பு தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது. இதன் அருகில் உள்ள கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து, தொட்டியில் நிரப்பி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், குடிநீர் தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. தொட்டியின் அருகில் உள்ள மரத்தின் வேரும், கட்டிடத்தை சேதப்படுத்தியுள்ளது.

மேலும், தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யாததால் தணணீரில் புழு உருவாகி இருக்கிறது. எனவே, புதிதாக தொட்டி கட்டித்தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பேரூராட்சி வினியோகிக்கும் குடிநீர் போதுமான இல்லை. இதனால், தொட்டி தண்ணீரைபயன்படுத்தி வருகிறோம். இந்த தண்ணீர் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யாத காரணத்தால் தண்ணீரில் புழுக்கள் உருவாகியுள்ளன. இதனால், நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தங்களது பகுதிக்கு புதிய தண்ணீர் தொட்டி அமைத்து தர வேண்டும்’ என்றனர்.

Related Stories: