3.83 கோடி பேருக்கு கொரோனா.. இங்கிலாந்தில் மீண்டும் மின்னல் வேகம்.. அமெரிக்காவில் அதிகரித்த மரணங்கள்.. இந்தியாவில் தினசரி பாதிப்பு குறைந்தது!!

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 83 லட்சத்தை கடந்தது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 83 லட்சமாக அதிகரித்துள்ளது.தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 83 லட்சத்து 46 ஆயிரத்து 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 84 லட்சத்து 20 ஆயிரத்து 663 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 69 ஆயிரத்து 830 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 85 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது . ஆனாலும், கொரோனாவால் இதுவரை 10 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 80,88,171

இந்தியா - 71,75,881

பிரேசில் - 51,14,823

ரஷியா - 13,26,178

ஸ்பெயின் - 9,25,341

கொலம்பியா - 9,24,098

அர்ஜெண்டினா - 9,17,035

பெரு - 8,53,974

மெக்சிகோ - 8,21,045

பிரான்ஸ் - 7,56,472

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 2,20,805

பிரேசில் - 1,51,063

இந்தியா - 1,09,856

மெக்சிகோ - 83,945

இங்கிலாந்து - 43,018

இத்தாலி - 36,246

பெரு - 33,419

ஸ்பெயின் - 33,204

பிரான்ஸ் - 32,942

ஈரான் - 29,070

கொலம்பியா - 28,141

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

இந்தியா - 62,27,296

அமெரிக்கா - 52,21,056

பிரேசில் - 45,26,975

ரஷியா - 10,31,785

கொலம்பியா - 8,06,703

பெரு - 7,53,959

அர்ஜெண்டினா - 7,42,235

தென் ஆப்ரிக்கா - 6,25,574

Related Stories: