திருவாலங்காடு ஒன்றியத்தில் தெருக்களில் ஓடும் கழிவு நீர்: நோய் பரவும் அபாயம்

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியத்தில் தெருக்களில் ஓடும் கழிவுநீரால் அந்த பகுதியில் கொசு உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு டெங்கு போன்ற உயிர் கொல்லி நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவலாங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட தாழவேடு ஊராட்சி தாழவேடு காலனி பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் செய்வதற்காக கிணறு தோண்டப்பட்டது. பின்னர் வெகுநாட்களாக அந்த கிணறு பயன்படுத்தாமல் விட்டதால் தற்போது மழை பெய்து அந்த கிணற்றில் நீர் நிரம்பி கிடக்கிறது.

மேலும், இந்த கிணற்றில் நீர் நிரம்பி அந்த பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி அந்த பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட உயிர்கொல்லி நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த கிணற்றை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் தெருக்களில் ஓடும் கழிவுநீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: