காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி விடுதலை

புதுடெல்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்படுவதற்கு முன்பாக, அரசியல் கட்சித் தலைவர்கள் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, முதலில் சிறையிலும் பின்னர் வீட்டு காவலிலும் வைக்கப்பட்டனர். இதில் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா விடுவிக்கப்பட்டனர். மெகபூபா மட்டும் தொடர்ந்து வீட்டு காவலில் இருந்தார். இதற்கிடையே, மெகபூபாவை இன்னும் எத்தனை காலம் சிறை வைக்க இருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், 2 வாரங்களுக்குள் காஷ்மீர் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், மெகபூபா, 14 மாதங்களுக்கு பிறகு, நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டார். காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாக செய்தித் தொடர்பாளர் ரோகித் கன்சால் இதனை அறிவித்தார். மெகபூபா விடுதலைக்கு உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories: