11.69% பேர் சிகிச்சை; நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 87% பேர் குணம்: மத்திய சுகாதாரத்துறை செயலர் பேட்டி

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 62 லட்சம் பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் தற்போதையை சூழல் குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; நாட்டில் தற்போது உள்ள கொரோனா சூழல் தொடர்பாக விளக்கம் அளித்தார். இந்தியாவை பொறுத்தவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை என்பது 62 லட்சத்தை கடந்துள்ளது. உலகிலேயே இந்தியாவில் தான் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

அதே போல தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை என்பது 9 லட்சத்துக்கும் கீழாக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 5-வது நாளாக 9 லட்சத்துக்கும் குறைவாக உள்ளதாக ராஜேஷ் பூஷன் தெரிவித்தார். மேலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 87% பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதித்த 11.69% பேர் சிகிச்சையில் உள்ளனர்; கொரோனாவால் 1.53% பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல இந்தியாவை பொறுத்தவரை கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. 8.07%-லிருந்து 6.4%-ஆகவும் தற்போது அந்த விகிதமானது 5.16% ஆக உள்ளது எனவும் கூறினார்.

Related Stories: