விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து சென்னை அழைத்துவரப்படுகிறார் அமைச்சர் துரைக்கண்ணு

விழுப்புரம்: மூச்சுத்திணறல் காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவமயைில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணு சென்னை அழைத்து வரப்படுகிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93) உடல்நலக்குறைவால் காலமானார். சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதுகு வலிக்காக சிகிச்சை பெற்று வந்த அவர், மாரடைப்பு காரணமாக அதிகாலை 1 மணியளவில் காலமானார். தமிழகமுதல்வரின் தாயார் காலமான செய்தியறிந்து, நேரில் சென்று நலம் விசாரிப்பதற்காக தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு இன்று காலை சென்னையில் இருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது இன்று காலை 10 மணி அளவில் அமைச்சர் துரைக்கண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதன்பின்னர், நெஞ்சு வலியில் இருந்து விடுபட்ட அமைச்சர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Related Stories: