திட்டக்குடி,:ராமநத்தம் அருகே தோனி ரசிகர் தனது வீட்டு சுவரை மஞ்சள் நிறத்துக்கு மாற்றி, தோனியின் ஓவியங்களை வரைந்துள்ளார்.கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே அரங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன். துபாயில் உள்ள ஆன்லைன் டிரேடிங் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தீவிர கிரிக்கெட் ரசிகரான கோபிகிருஷ்ணன் கிரிக்கெட் வீரர் தோனி மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார். டோனி விளையாடும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ஆர்வத்தோடு கண்டுகளித்த கோபிகிருஷ்ணன் தற்போது விடுமுறைக்காக தனது சொந்த கிராமத்துக்கு வந்துள்ளார்.