மாமல்லபுரம் சந்திப்பின் ஓராண்டு நிறைவு: மோடி - ஜின்பிங் சந்திப்பு பலனளித்ததா?.. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் கருத்து

சென்னை: மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜிஜின்பிங் சந்திப்பு நிகழ்ந்து ஓராண்டு கடந்து விட்டது. மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்திய இந்த சந்திப்பு ஏமாற்றத்தை தந்துள்ளதாக முன்னாள் ராணுவ அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். எல்லை பிரச்சனையில் நேரு காலம் முதலே சீனா ஏமாற்றும் யுத்தியையே கையாண்டு வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 2019 அக்.11, 12-ம் தேதி உலக நாடுகளின் கவனம் அனைத்தும் சென்னை மீது. பிரதமர் மோடி சீன அதிபர் ஆகியோரின் மாமல்லபுரம் சந்திப்பே இதற்கு காரணம். அதிநவீன விமானத்தில் மீனம்பாக்கம் வந்து இறங்கிய அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்ப்பு மறக்க முடியாத ஒன்று.

இருநாட்டு தலைவர்கள் வருகையால் புதுப்பொலிவு பெற்றது மாமல்லபுரம். அங்குள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனதபசு உள்ளிட்ட பல்லவ கால சிற்பங்களை இருநாட்டு தலைவர்களும் வியந்து பார்த்தனர். அதன் அருகில் அமர்ந்தும் பேசினர். கோவளம் கடற்கரை நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இருநாட்டு தலைவர்கள் சந்திப்பில் முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. தலைவர்கள் சந்திப்பு நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த சந்திப்பு ஏமாற்றத்தையே தந்துள்ளது என்கின்றனர் ஒய்வு பெற்ற ராணுவ வீரர்கள்.

மாமல்லபுரம் சந்திப்புக்கு பிறகு இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர்களின் அத்துமீறல் அதிகரித்து விட்டது. எல்லைக் கட்டுப்பாடு கோடு விவகாரத்தில் நேரு காலம் முதலே சீனா ஏமாற்றி வருவதையும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

Related Stories: