ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த 5 நாட்களில் நடந்த 4 துப்பாக்கிசூடு சம்பவங்களில் 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: டிஜிபி தில்பக் சிங் பேட்டி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த 5 நாட்களில் மட்டும் 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என டிஜிபி தில்பக் சிங் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்து அறிவித்தது. இதன் பின்பு இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த 2003ம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதியில் அமைதி மற்றும் கட்டுப்பாடு நீடிக்க செய்ய இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த புரிந்துணர்தலை கடைப்பிடிக்கும்படி தொடர்ந்து இந்தியா அந்நாட்டுக்கு வலியுறுத்தி வருகிறது. ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து இதனை மீறி வருகிறது. இதில் சில நேரங்களில் சாதாரண ஆயுதங்களை கொண்டும், சில நேரங்களில் பெரிய வகை ஆயுதங்களை கொண்டும் தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஷ்மீரில் தற்போதைய நிலவரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிஜிபி தில்பக் சிங்; ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த 5 நாட்களில் மட்டும் 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து பேசிய அவர்;  குறிப்பாக கடந்த 5 நாட்களில் நடந்த 4 துப்பாக்கிசூடு சம்பவங்களில் 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

அதேபோல இந்த வருடம் முழுவதும் 75 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடத்தப்பட்டு உள்ளது இதில் 180 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அதேவேளை பயங்கரவாதிகள், அவர்களுக்கு உதவியவர்கள் என மொத்தம் 138 பேர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று நடந்த என்கவுண்டரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய தளபதியும், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியுமான ஷைபுல்லா கொல்லப்பட்டுள்ளான். கொல்லப்பட்ட பயங்காவாதி பாதுகாப்பு படையினர் 3 பேர் உயிரிழக்க காரணமானவன் எனவும் கூறினார்.

Related Stories: