தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: வடகிழக்கு பருவமழை குறித்து தமிழகத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், தலைமை செயலாளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். வடகிழக்கு பருவமழை இம்மாதம் 3வது வாரம் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரலாக மழை பெய்து வருகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், ஏரி, குளங்களை தூர்வாருதல், தாழ்வான பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள், மற்றும் பேரிடர் மீட்பு குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் கூறப்படுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 47% வரை கிடைக்கும் எனவும், கடந்த காலக்கட்டத்தில் ஒக்கி, வார்தா, கஜா உள்ளி்ட்ட புயல்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களை சீர்குழைத்தது. எனவே அதை கருத்தி்ல் கொண்டு தமிழக அரசின் பல்வேறு முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டிது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: