மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் சட்டவிரோதமானது, செல்லாது என அறிவிக்கக்கோரி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி: எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே விவசாயிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இயற்றப்பட்ட வேளாண் சட்டத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று விசாரணை நடத்துகிறது. இந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து ஜனாதிபதி ஒப்பதல் வழங்கியதால்  மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டு தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதில்  டெல்லி, அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் வேளாண் சடத்திற்கு எதிராக தீவிர போராட்டத்தை நடத்தி வருகின்றனர். குறிப்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தரப்பில் தமிழகம் முழுவதும் மிகப்பெரும் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

இதற்கிடையே வேளாண் சட்டங்கள் அரசியல் சட்டத்திற்கு முரணானது, சட்டவிரோதமானது, செல்லாது என அறிவிக்கக்கோரி தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, ராஷ்டிரீய ஜனதாதள எம்.பி. மனோஜ்குமார் ஜா, வக்கீல் மனோகர் லால் சர்மா, சத்தீஷ்கார் கிசான் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த ராகேஷ் வைஷ்ணவ் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (திங்கட்கிழமை) விசாரிக்கிறது.

Related Stories: