அதிமுக அரசு என்னை வன்கொடுமை செய்து விட்டது: தற்கொலை செய்த தவில் கலைஞரின் வீடியோ பேச்சு வைரல்

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே ராமநாதன் நகரைச் சேர்ந்த  மாரிமுத்து (64), தவில் கலைஞர். மனைவி, 3 மகன்கள் மற்றும் ஒரு  மகள் உள்ளனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை  செய்தார். கொரோனா ஊரடங்கால் கடந்த 6  மாதமாக நிகழ்ச்சிகள் இல்லாததால், கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் கூறப்பட்டிருந்தது.

மாரிமுத்து தற்கொலை செய்வதற்கு முன் பேசியதாக வீடியோ ஒன்று, வாட்ஸ் அப் உள்ளிட்ட  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  அதில், தனது வீடருகே குடியிருக்கும் நடனக்கலைஞர் குடும்பத்திற்கு ₹50  ஆயிரத்தை, வெளியில் கடனாக வாங்கி கொடுத்ததாகவும், அதை திருப்பி  கேட்டபோது, நடனக்கலைஞர் மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.  எனக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதேபோல,  தமிழகத்தை ஆளும் அதிமுக அரசும் வன்கொடுமை செய்து விட்டது. எனது கடன் 7 லட்சத்தை தமிழக அரசு கட்ட வேண்டும். எனவே, இந்த  தொகையை எனது  குடும்பத்தாரிடம் தமிழக அரசு வழங்கி, அவர்களையாவது வாழ வைக்க வேண்டும் என கூறி உள்ளார்.

Related Stories: