சிதம்பரம் அருகே தெற்குதிட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரிக்கு அவமதிப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே தெற்குதிட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரிக்கு அவமதிப்பு நடந்துள்ளது. தாழ்த்தப்பட்ட பெண் என்பதால் ஊராட்சி மன்ற தலைவரை துணைத்தலைவர் தரையில் அமர வைத்துள்ளார். ஜூலையில் நடந்த அவமதிப்பு காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. சுதந்திர தினத்தன்று ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரியை தேசிய கொடி ஏற்றவும் அனுமதிக்கவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படங்களை கொண்டு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஊராட்சி மன்ற துணை தலைவர் மோகன்ராஜ், ஊராட்சி மன்ற செயலாளர் சிந்துஜா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புவனகிரி காவல்நிலைய போலீசார் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரியிடம் நேரில் விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories: