உலகம் முழுவதும் வறுமையில் வாடுபவர்களுக்காக 58 ஆண்டுகளாக உணவு அளித்த ஐ.நா.சபையின் உலக உணவு திட்டம் அமைப்பு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!!

ஆஸ்லோ : உலகின் உயரிய விருது நோபல். பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு நோபல் விருதுகள் அளிக்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகளின் அறிவிப்புகள் வெளிவர தொடங்கி விட்டன.  ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டோக்ஹோமிலிருந்து நோபல் பரிசை வென்றவர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிகொண்டிருக்கிறது. இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டது. ரோஜர் பென் ரோஸ், ரிய்ன்ஹார்ட் கென்செல், ஆண்ட்ரியா கெஸ் கருந்துளைப் பற்றிய ஆய்வுக்காக இந்த விருது அளிக்கப்பட்டது.

வேதியியல் பிரிவுக்கான விருதாளர்கள் அறிவிக்கப்பட்டனர். வேதியியலுக்கான நோபல் பரிசை ஜெனிபர் ஏ.டெளட்னா, இம்மானுவே சார்பென்டியர் ஆகிய இரு பெண்களுக்கு வழங்கப்படுகிறது. நேற்று  இலக்கியத்திற்கான நோபல் பரிசாக அமெரிக்க கவிஞர் லூயிஸூக்கு அறிவிக்கப்பட்டது. இன்று ஐ.நா.சபையின் உலக உணவு திட்டம் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது. உலகம் முழுவதும் வறுமையில் வாடுபவர்களுக்காக 58 ஆண்டுகளாக உணவு அளித்ததற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 88 நாடுகளைச் சேர்ந்த 10 கோடி பேருக்கு உணவு அளித்துள்ளது.பசியை போக்குதல் மற்றும் போரை தவிர்க்கும் நோக்கில் செயல்பட்டதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அக். 10ம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது.

Related Stories: