சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் குன்னூர் சிம்ஸ் பூங்கா வெறிச்சோடியது

குன்னூர் : சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் சிம்ஸ் பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது.கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து துறைகளின் செயல்பாடுகளும்‌ முடக்கப்பட்டன. 5 மாத முடக்கத்திற்கு பின் தற்போது ஒவ்வொரு துறைக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை இ-பாஸ் நடைமுறைகள் ரத்து செய்யப்பட்டாலும், நீலகிரி போன்ற கோடை வாசஸ்தலங்களுக்குச் செல்ல இ-பாஸ் நடைமுறையில் உள்ளது. நீலகிரி மாவட்ட நிர்வாகம்  வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு தனி இ பாஸ் மூலம் மாவட்டத்திற்குள் வர அனுமதியளித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தையும் மூட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகளை நம்பி கடைகள் வைத்திருந்த வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிப்படைந்து வந்தனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் திறக்கப்பட்டது.

பூங்காக்கள் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் முக கவசங்கள், சமூக இடைவெளியுடன்  அனுமதிக்கப்பட  உத்தரவிடபட்ட நிலையில்,  வியாபாரிகளும் கடைகளை  திறந்துள்ளனர். இருப்பினும் எதிர்பார்த்த அளவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் வியாபாரிகள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஐநூறு முதல் ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து சென்ற சிம்ஸ் பூங்காவில் தற்போது ஒரு நாளுக்கு ஐம்பது சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  

சுற்றுலா பயணிகள் இல்லாததால் பூங்காக்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

Related Stories: