டெல்லி : போர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் இருக்கிறார். போர்ப்ஸ் (Forbes) பத்திரிகை இந்தியாவின் ‛டாப்-100 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் இருக்கிறார். மேலும் அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு தொடர்ந்து உயர்ந்து தற்போது 6 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. போர்ப்ஸ் பணக்கார இந்தியர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 13வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளார்.