வீட்டிலேயே செய்யலாம் ரோஜாப்பூ சர்பத்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

தேவையான பொருட்கள்

ரோஜா இதழ்கள் - 500 கிராம்,

சர்க்கரை - 1 கிலோ,

குங்குமப்பூ - 1 கிராம்,

பன்னீர்-30 மி.லி.,

தண்ணீர்- 3 லிட்டர்.

செய்முறை

சுத்தமான தண்ணீரில் ரோஜா இதழ்களை பன்னிரெண்டு முறை ஊற வைத்து, பின் வடிகட்டவும். வடிகட்டிய நீரோடு, சர்க்கரை கலந்து பாகு  காய்ச்சி, பாகு தேன் பதம் வந்ததும் பன்னீர் சேர்த்து, இளஞ்சூடாக உள்ள போது பாட்டிலில் அடைத்துக் கொள்ளவும். அதில் குங்குமப்பூவை  போட்டுவிட வேண்டும். இந்த சர்பத் உடல் உஷ்ணத்தை சரிசெய்யும். மலச்சிக்கல், மூலச் சூட்டிற்கு சிறந்த மருந்து. பித்தக் கோளாறை  நீக்கும். தினமும் இரண்டு வேளை 15-20 மி.லி. பசும்பாலில் கலந்து சாப்பிட்டால் நரம்புகள், கண்கள் குளிர்ச்சி பெறும்.

- ஆர்.கீதா,சென்னை

- எம்.எஸ்.மணியன்