காங்கிரஸ் ஆட்சியில் வேளாண் மசோதாக்கள் தூக்கி எறியப்படும் என்ற ராகுல்காந்தியின் பேச்சு பாராளுமன்றத்தை அவமதித்துள்ளது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்கள் தொடர்பாக விவசாய தலைவர்களுடனான கலந்துரையாடல் மற்றும் விளக்கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. தமிழக பாஜ விவசாய அணி சார்பில் நடந்த கூட்டத்துக்கு தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் தலைமை தாங்கினார். பாஜ விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் முன்னிலை வகித்தார். இதில் 45 விவசாய சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: விவசாயிகள் நலனுக்காக வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது.

ஆனாலும் விவசாயிகளை எதிர்க்கட்சிகள் குழப்ப பார்க்கிறார்கள். 2019ல் காங்கிரஸ் அறிக்கையில் இதை போட்டார்கள். அதனை நாட்கள் நிறைவேற்றியிருக்கிறோம். மோடி செய்து விட்டார் என்பதற்காக போராடி வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண் மசோதாக்கள் தூக்கி வீசப்படும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இதன் மூலம் அவர் பாராளுமன்றத்தை அவமதித்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் பாஜ சார்பில் மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம், பாஜ அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம், பாஜ செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: