ஹத்ராஸ் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்: உ.பி.அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்.!!!

டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நான்கு பேரை  போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்  பரிந்துரை செய்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ஹத்ராஸ் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தின் ஓய்வு நீதிபதி தலைமையிலான சிறப்பு குழு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும்.  அப்போது தான் இதில் நடந்த உன்மை என்னெவென்று வெளிப்படையாக தெரியவரும்.மேலும் சிபிஐ விசாரணையாகவே இருந்தாலும் கூட ஓய்வு பெற்ற நீதிபதிகளின்  கண்காணிப்பில் தான் அது நடைபெற வேண்டும். குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் வைத்து இந்த விசாரணை நடைபெற்றால் அது நிச்சயம் நியாயமானதாக இருக்காது என்பதால்  வழக்கை டெல்லிக்கு மாற்றி, அதனை நடத்தி முடிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட மனுக்கள்  அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், ஹத்ராஸ் வழக்கு குறித்து உச்சநீதிமன்றத்தில் உத்திரப்பிரதேச அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், மாநில அரசு சார்பில் ஹத்ராஸ் வழக்கை விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை தொடர்பான விவரங்கள் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அரசுக்கு எதிராகவும், மாநில அரசை இழிவுப்படுத்தும் விதமாகவும் பல்வேறு தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.  மாநில அரசு இந்த வழக்கை சரியான முறையில் நடத்தி வருகிறது. குறிப்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: