திருச்சி மாநகரில் உள்ள குடிசை பகுதியில் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாயின: போலீசார் விசாரணை..!!

திருச்சி: திருச்சி மாநகரில் உள்ள செந்தண்ணீர்புரம் அருகே சங்கிலியண்டபுரம் ராமமூர்த்தி நகரில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகளை கொண்ட பகுதி உள்ளது. இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளிகள் ஆவார்கள். இந்த சூழலில் நேற்று இரவு தங்கள் பணிகளை முடித்துவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை 3 மணி அளவில் அங்குள்ள குடிசை வீடுகளில் தீ பற்றி எரிந்தது.

இதனையடுத்து, உடனடியாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலறிந்து 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் மளமளவென பற்றி எரிந்த தீ,  நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகளில் பரவியதால் அந்தப்பகுதியே எரிந்து சாம்பலானது.

இந்த நிலையில் இப்பகுதியில் தீ விபத்து ஏற்பட காரணம் என்ன என்ற முதல்கட்ட விசாரணையில், ஒரு குடிசையில் சமையல் பயண்பட்டிற்கு வைத்திருந்த சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ, பக்கத்தில் உள்ள வீடுகளிலுக்கும் பரவியதால் இந்த பெரும் விபத்து நடந்ததாக தெரிய வருகிறது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின. ஆனாலும், அதிர்ஷ்டவசமாக இந்த பெரும் விபத்தில் உயிர்சேதம் எதுவும்  ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: