சீனாவில் தேசிய தின கொண்டாட்டம் களைகட்டியுள்ளது: சீன நகரங்கள் வண்ண விளக்குகளில் ஜொலிக்கின்றன: கொரோனா உருவான வுகான் நகரில் மக்கள் ஆரவாரம்

வுகான்: உலகமே கொரோனா பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில் சீனாவில் தேசிய தினம், சுற்றுலா என அந்நாட்டு மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை மற்ற நாட்டு மக்கள் ஏக்கத்துடன் காணும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிச. மாதம் சீனாவின் வுகான் நகரில் தென்பட்ட கொரோனா வைரஸ் அந்நாட்டில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தாமல் ஐரோப்பிய நாடுகளான அமெரிக்கா மற்றும் இந்தியாவில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. சீனாவில் கடைப்பிடிக்கப்பட்ட கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் அந்நாட்டின் தேசிய தினமான அக்.1-ம் தேதி மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

வுகான் நகரில் கட்டிடங்கள் வண்ண விளக்குகளில் ஜொலித்தன. வானை தொடும் ஒளிவிளக்கு அலங்காரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சீனாவில் அக். 1-ம் தேதி முதல் 8 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. முக்கிய நகரங்களில் உள்ள கடை வீதிகள், மால்கள், ஹோட்டல்கள் என எங்கும் கூட்டம் காணப்படுகிறது. அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை நிகழ்ச்சிகளை மக்கள் கண்டுகளித்து வருகின்றனர். வுகான் நகரில் உள்ள சுற்றுலா மையமான மஞ்சள் டவரில் மக்கள் கூடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

சீனாவில் 8 நாட்கள் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் 2-வது நாளில் மட்டுமே 11 கோடி பேர் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து நேரத்தை மகிழ்ச்சியோடு செயல்பட்டதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றன. சுற்றுலா துறைக்கு கிடைத்த வருவாய் 1,200 கோடி ரூபாய் என்றும் தெரியவந்துள்ளது.

Related Stories: