சட்டம் - ஒழுங்கில் உத்தரப் பிரதேசம் முன்னணியில் உள்ளது..ஹத்ராஸ் சென்ற ராகுல் காந்தி தானே கீழே விழுந்துவிட்டு நாடகமாடுகிறார் : இல. கணேசன்

சென்னை :  அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் இடையிலான பிரச்சனை தீராவிட்டால் ஆட்சி கட்டிலில் அக்கட்சி அமர்வதை பற்றி கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்று பாஜக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்  தெரிவித்துள்ளார். மா.போ.சி -யின் 25ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர், செய்தியாளர்களின் கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார். மேலும் தமிழுக்காகப் போராடிய ம.பொ.சி.யின் தியாகம் பெரிது என்றும், அதற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப்பெற வேண்டும் அவர் கூறினார்.

உரிமைகளை பெறுவதற்காக எடப்பாடி பழனிசாமியும் ஓ பன்னீர் செல்வமும் குரல் எழுப்பி வருவதாக குறிப்பிட்டுள்ள இல. கணேசன், இருவருக்கும் இடையிலான பிரச்சனையில் சுமூக தீர்வு ஏற்பட வேண்டும் என்றார். சட்டம் - ஒழுங்கில் உத்தரப் பிரதேசம் முன்னணியில் திகழ்ந்துவதாகவும் ஹத்ராஸ் சென்ற ராகுல் காந்தி தானே கீழே விழுந்துவிட்டு நாடகமாடுவதாகவும் இல. கணேசன் கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், தமிழ், தமிழ் என்று வெறுமனே T-Shirt-ல் போட்டுக்கொண்டால் தமிழ் வாழாது.இந்தியும் தெரியாமல், தமிழும் தெரியாமல் ஒரு தலைமுறை உருவாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 5 பேர் பாஜகவில் தேசிய அளவில் பொறுப்புகளில் உள்ளனர். ஹெச்.ராஜாவின் திறமைக்கு விரைவில் அங்கீகாரம் கிடைக்கும் என்றும், அது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கும், என்றும் கூறினார்.

Related Stories: