காந்தி ஜெயந்தியையொட்டி கதர் சிறப்பு விற்பனை

காஞ்சிபுரம்,:காந்தியடிகளின் 152வது பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் ஒன்றியம் சிறு காவேரிப்பாக்கத்தில் உள்ள காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில்  காந்தியடிகள் படத்துக்கு, கலெக்டர் பொன்னையா மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அவர் கூறியதாவது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு கதர் அங்காடியும், தச்சு கருமார அலகும் செயல்படுகின்றன. கதர், பட்டு, உல்லன், பாலியஸ்டர் ரகங்களுக்கு மத்திய,  மாநில அரசுகள் இணைந்து ஆண்டு முழுவதும் 30 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது.

இந்தாண்டு தீபாவளி சிறப்பு விற்பனை துவங்கப்பட்டுள்ளது. எனவே கதர் மற்றும் கிராமப் பொருட்களை வாங்கி கிராமங்களில் வாழும் எண்ணற்ற  ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றம் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

காஞ்சிபுரம் கதர் அங்காடியில் இந்தாண்டு விற்பனை குறியீடாக 72 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலர்களுக்கு சுலப தவணையில்  கதர் ரகங்கள் வழங்கப்படுகின்றன. தச்சு கருமார அலகு உற்பத்தி இலக்கு 300 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார்.காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் வாலாஜாபாத் கணேசன்,  முன்னாள் எம்எல்ஏக்கள் சோமசுந்தரம், காஞ்சி பன்னீர்செல்வம், மைதிலி  திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: