தங்கம் கடத்தல் வழக்கில் அப்ரூவராகிறார் சந்தீப் நாயர்: திடீர் திருப்பத்தால் பரபரப்பு

களியக்காவிளை: கேரளாவில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தங்கம் கடத்தல் வழக்கில் சந்தீப் நாயர் என்பவரை 2வது குற்றவாளியாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சேர்த்துள்ளது. பெங்களூருவில் முதல் குற்றவாளியான சொப்னாவுடன் இவரும் கைது செய்யப்பட்டார். இன்னொரு குற்றவாளியான ரமீஸ் என்பவருடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்தது. ரமீஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்துள்ளார். சந்தீப் நாயர் மூலம் தங்கம் வாங்கிய ரமீஸ், அதை விற்பதால் கிடைத்த பணத்தை தீவிரவாத இயக்கத்தினருக்கு கொடுத்ததாக என்ஐஏ குற்றம்சாட்டி உள்ளது. ஆனால் இந்த வழக்கில் இதுவரை குறிப்பிட்டு சொல்லும் வகையில் என்ஐஏ.வுக்கு முக்கிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

வழக்கில் கைது செய்யப்பட்ட மூவாற்றுப்புழாவை சேர்ந்த 2 பேரை அப்ரூவராக மாற்ற என்ஐஏ முயற்சித்தது. ஆனால், அது முடியாமல் போனது. இந்நிலையில், அப்ரூவராக மாற தான் தயாராக இருப்பதாக சந்தீப் நாயர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஒப்புதல் கடிதத்தை, என்ஐஏ நீதின்றத்தில் நேற்று அவர் அளித்தார். அதில், ‘நான் அப்ரூவராக தயார். எனக்கு தெரிந்த விபரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க தயாராக உள்ளேன்,’ என்று கூறியுள்ளார். இதனால், தங்கம் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: