செவ்வாய் கிரகத்தில் 3 உறை நிலை ஏரிகள் கண்டுபிடிப்பு.: மார்ஸ் எக்ஸ்பிரஸ் கலம் மூலம் தகவல் உறுதி

சென்னை: செவ்வாய் கிரகத்தில் தென் துருவத்தின் அருகில் 3 உறை நிலை ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2003-ம் ஆண்டு டிசம்பர் மதம் முதல் செவ்வாய் கிரகத்தை ஐரோப்பிய விண்வெளி மையத்துக்கு சொந்தமான மார்ஸ் எக்ஸ்பிரஸ் கலம் சுற்றிவருகிறது. அந்த ஆய்வுக் கலத்தில் உள்ள ரேடார் தரவுகளை கொண்டு செவ்வாய் கிரகத்தில் தென் துருவத்தில் நிலத்துக்கு அடியில் 20 கிலோ மீட்டர் அகலம் கொண்ட ஏரி ஒன்று கடந்த 2018-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அதே பகுதியில் மேலும் மூன்று உறை நிலை ஏரிகள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 2010 மற்றும் 2019-க்கு இடையே சேகரிக்கப்பட்ட 134 ரேடார் குறிப்புகளை கொண்டு தரவு தொகுப்பை ஆய்வு செய்ததில் இந்த கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த கண்டுபிடிப்பு பூமியை தவிர்த்து பிற கோள்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்ற ஆராய்ச்சியில் மிகவும் முக்கிய பங்குவகிக்கிறது.

Related Stories: