பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தகுதி பெற்றுள்ளார். முதல் சுற்றில் பெலாரசின் இகோர் ஜெரசிமோவுடன் (83வது ரேஙக்) மோதிய நடால் (2வது ரேங்க்) 6-4, 6-3, 6-0 என்ற நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2மணி, 5 நிமிடங்களுக்கு நீடித்தது. மற்றொரு முதல் சுற்றில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் (3வது ரேங்க்), குரேஷிய வீரர் மரின் சிலிச்சுடன் (40வது ரேங்க்) மோதினார். 2 மணி நேரம் நீடித்த இப்போட்டியில் தீம் 6-4, 6-4, 6-3 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார்.