சென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், திருச்சி, சேலம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்கள், ஏனைய உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. மேலும், தென் தமிழக கடலோர மாவட்டங்கள், ஏனைய உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை நகர், புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது.