நேற்று செயற்குழு கூட்டம் முடிந்த நிலையில் ஆதரவு நிர்வாகிகளுடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் இன்று ஆலோசனை: ஈபிஎஸ் ஆதரவாளகள் அதிர்ச்சி

சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவு நிர்வாகிகளுடன் தனது வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த ஆலோசனை கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, வைத்திலிங்கம். முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். நேற்று ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிர் 5 மணி நேரத்திற்கு மேலாக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி கூட்டம் நடைபெற்றது. மேலும் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் நடைபெற்று முடிந்த பின்பு அக்.7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் என்பது பற்றி முதல்வரும், துணை முதல்வரும் சேர்ந்து அறிவிப்பார்கள் என முனுசாமி நேற்று பேட்டியளித்திருந்தார். இந்நிலையில் தற்போது துணை முதல்வர் ஆலோசனை நடத்துவது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: