பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை ஸ்ரீரங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் திவ்யா (20), தனியார் கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவரும், வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்த வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவை சேர்ந்த ஐயப்பனும் (21) காதலித்து வந்தனர். இதுபற்றி இருதரப்பு குடும்பத்தினருக்கும் தெரிய வந்ததால், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த திவ்யா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த ஐயப்பன், காதலி இறந்த துக்கத்தில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>