மெட்ராஸ் மெடிக்கல் மிஷனின் வெபினார் இயங்குதள ஆலோசனை கூட்டம்

சென்னை: இந்தியாவில் சுகாதார நலம் பல்வேறு மாற்றங்கள் அடைந்து வருகிறது. இந்தியா கோவிட்-19 சவாலை நன்கு எதிர்கொள்கிறது. மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் (MMM) பரிவோடு, நெறியாக, அதிக செலவின்றி, தொழிற்நுட்பத்தை ஏதுவாக்கி சுகாதாரத்தை வழங்க பெரும் முயற்சியாற்றும் ஒரு தன்னிகரற்ற சுகாதார நல மையமாக விளங்குகிறது. இதுகுறித்து, மெட்ராஸ் மெடிக்கல் மிஷனின் இதயவியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜேக்கப் ஜேம்ஸ்ராஜ் கூறுகையில், “உலக இதய தினத்தை முன்னிட்டு நாம் இதயத்தின் பொறுப்புணர்வுக்காக மீண்டும் ஒருமுறை உறுதியேற்போம். இதயநாள நோய் இறப்பின் முன்னணி காரணியாக விளங்குகிறது. மெட்ராஸ் மெடிக்கல் மிஷனின் ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைத் துறை இன்று (29ம் தேதி) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை வெபினார்’’ என்ற ஒரு இயங்குதள ஆலோசனை கூட்டம் `நியூட்ரியோத்சவ் 2020’ஐ ஒருங்கிணைத்து நடத்துகிறது”, என்றார்.

Related Stories: