15 பேருக்கு கொரோனா உறுதியானதால் அதிமுக செயற்குழுவில் அனுமதிக்கப்படவில்லை

சென்னை: அதிமுக செயற்குழு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அதிமுக அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 293 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளும் கூட்டம் என்பதால் இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதற்கான முடிவு வெளிவந்த நிலையில், பரிசோதனை நடத்தப்பட்ட 293 பேரில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.  சென்னையில் அதிமுகவினர் திரண்டுள்ள நிலையில், கூட்டத்தில் பங்கேற்க வந்த 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>