புதிய வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெறும் வரை போராட்டம்: தயாநிதி மாறன் பேச்சு

சென்னை: புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசினார். வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில் திமுக எம்எல்ஏக்கள், கூட்டணி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசியதாவது:

விலை பொருட்களை பாதுகாக்க வேண்டிய அரசு, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் பெறுவதற்காக செயல்பட்டு வருகிறது. நானும் விவசாயிதான் என சொல்லிக் கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு என்ன செய்தார். இந்த சட்டத்தால் மக்களின் உணவு செலவு அதிகரிக்கும். ஆட்சி மாறினால் தான் மக்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதா சட்டத்தை திரும்ப பெறும்வரை போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: