மாநில உரிமைகளை அடகு வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி: கே.எஸ்.அழகிரி ஆவேசம்

சென்னை:  மாநில உரிமைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துக் கொண்டிருக்கிறார் என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.  

 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கொருக்குப்பேட்டையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:  விவசாய மசோதாவை எதிர்கட்சிகள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளும் எதிர்க்கின்றனர். பாஜவை சேர்ந்த விவசாய அமைப்புகள்கூட எதிர்க்கின்றன. சிமென்ட் விலையை அவர்களே நிர்ணயித்து கொள்ளலாம் என்று மத்திய அரசு சொன்னது.

உடனே சிமென்ட் நிறுவனங்கள் ஒன்று கூடி விலையை உயர்த்தினார்கள். அதுபோலதான் தற்போது விவசாயிகளையும் விவசாயத்தையும் மத்திய அரசு அழிக்க பார்க்கிறது. மாநில உரிமைகளை தமிழக அரசு விட்டு கொடுக்கிறது. மாநில உரிமைக்காக குரல் கொடுத்த கலைஞர் அமர்ந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு, தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாநில உரிமைகளை அடகு வைத்து கொண்டிருக்கிறார்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>