கொள்ளையனான தங்கம் வென்ற பாக்ஸர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ெதாடர் வழிப்பறியில் ஈடுபட்டுவந்த கதிரேசபிரபு, பாலமுருகன், அரசராஜன் ஆகியோரை நிலக்கோட்டை  போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களில் குல்லிசெட்டிபட்டியை சேர்ந்த பாலமுருகன், மைக்ரோ பயாலஜி பட்டதாரி. நாக்பூரில் பெற்றோருடன் வசித்த இவர், தேசிய அளவில் பாக்ஸிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்.  கொரோனோ ஊரடங்கால் குல்லிசெட்டிபட்டிக்கு திரும்பிய பாலமுருகன், கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி நண்பர்களுடன் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார். திருடிய டூவீலரில் நாக்பூருக்கு சென்ற பாலமுருகன் அதை அங்கு மறைத்துவைத்துவிட்டு விமானத்தில் திரும்பியதும் தெரிய வந்துள்ளது.

Related Stories:

>